கருணாநிதி குறித்த கேள்வி
‘கலைஞர் என்னும் சிறப்பு பெயர், மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா’ எது என்ற கேள்வி, நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு, ‘பழநியப்பன் நாடக பாராட்டு விழா, செம்மொழி மாநாட்டு விழா, துாக்கு மேடை நாடக பாராட்டு விழா, பராசக்தி வெற்றி விழா’ என, நான்கு விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழக அரசின் ஒவ்வொரு போட்டி தேர்வுகளிலும், தி.மு.க., குறித்தும், தி.மு.க., தலைவர்கள் குறித்தும் வினாக்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
‘தினமலர்’ 13.10.2025 பக்கம்
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலைஞரைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாதா? அரசியலை விட்டுத் தள்ளுங்கள். 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சிறந்த எழுத்தாளர் – படைப்பாளர் – பேச்சாற்றல் மிக்கவர்.
இவரைப்பற்றி தேர்வில் கேள்வி கேட்காமல் ‘தீண்டாமை ேஷமகரமானது’ என்று சொன்ன சங்கராச்சாரியாரைப் பற்றிதான் கேள்வி கேட்க வேண்டுமா?
தினமலரின் பார்ப்பனக் குறும்பு
Leave a Comment