சிவகங்கை, அக். 14- சிவகங்கை நகர் திராவிட முன்னேற்றக் கழ கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும்,திராவிடர் கழகத்தின் மீதும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரிடம் மிக அன்பு பாராட்டியவரும், திராவிடர் இயக்கத் தீரரும், சிவகங்கை நகர் மன்றத்தின் சிறப்பு மிகு தலைவராக பணியாற்றி சிவகங்கை மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருந்த தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து, சிவகங்கை மக்களின் அன்பை பெற்றவருமான
சொ. லெ. சாத்தையா 12-10-2025 அன்று இயற்கை எய்தினார்.
செய்தி அறிந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த சொ.லெ.சாத்தையாவின் மகன் அன்பழகனிடம் அலை பேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்துக் கொண் டார்கள். மாவட்டக் காப்பாளர் வழக்கறிஞர் ச. இன்பலாதன், மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்று மாவட்ட கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செய்ததோடு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் செய்தியினை நகல் எடுத்து வந்திருந்த உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கினர்.
சிவகங்கை மாவட்ட தி.மு.கழக செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சருமான கேஆர். பெரியகருப்பன், இளை யாங்குடி சட்டமன்ற தொகுதி மேனாள் உறுப்பினர் சுப.மதியரசன், சி.எம்.துரை ஆனந்த் மற்றும் ஏராளமான தி.மு.கழகத் தோழர்களும் பொதுமக்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.
