டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் தேர்தல்: காங்கிரஸ் 60 இடங்களில் போட்டியிட சம்மதம் என்பதாக தகவல்.
* நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியில், மஞ்சியின் ஜே.எம்.எம்., உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.பி. கட்சிகளுக்கு உரிய தொகுதி கிடைக்கவில்லை என புகார்.
* கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அரசு இடங்களில் ஷாகா செய்வதற்கு தடை விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசோடு கலந்து ஆலோசிக்க முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமைச் செயலாளருக்கு உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கேரள தொழில்நுட்ப வல்லுநரின் தற்கொலை குறித்து சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் வரம்பு மீறல் குறித்து விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை.
தி இந்து:
* பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள் மீதான கூட்டு நாடாளுமன்றக் குழுவை காங்கிரஸ் புறக்கணிக்கும் என மோடி அரசுக்கு தெரிவித்துள்ளது.
* ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்ததால் காசா பிரகடனம் கையெழுத்தானது; யுத்த நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் டிரம்ப், எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
* தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின்படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை நேற்று (13.10.2025) வெளியிட்டது.
தி டெலிகிராப்:
* டபுள் என்ஜின் சர்க்கார் ஆட்சியில்: ஒரு வாரத்திற்கு முன்பு கட்டாக்கில் இருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் உள்ள குந்துனியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் வலதுசாரி ஆர்வலர்களால் தாக்கப்பட்டு, அனுமனின் உருவம் தாங்கிய காவிக் கொடிகளுடன் பொது இடங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட காணொலி பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அய்.அய்.டி., அய்.அய்.எம்.-களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை: தற்கொலைக் கணக்கெடுப்பில் சேருங்கள் அல்லது பாதகமான உத்தரவை எதிர்கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. 2018 முதல் முன்னணி கல்வி நிறுவனங்களில் சுமார் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அவற்றில் 39 அய்.அய்.டி-கள், 25 என்.அய்.டி-கள், 25 மத்திய பல்கலைக்கழகங்கள், நான்கு அய்அய்எம்-கள் ஆகும்.
– குடந்தை கருணா