Miss – Ms
Ms.,Mrs., மற்றும் Miss ஆகியவை மூன்றும் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் போது பயன்படுத்தப்படும் பட்டங்கள். எந்தப் பட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது அந்த பெண்ணின் வயது, திருமண நிலை, மற்றும் அவள் விரும்பும் அழைப்பு முறைக்கு ஏற்ப மாறுபடும்.
விளக்கம்:
Ms. (உச்சரிப்பு: [மிஸ்]) என்பது திருமண நிலையைக் குறிப்பிடாத ஒரு நடுத்தரமான (நியூட்ரல்) முறையாகும். இதனை எல்லா பெண்களுக்கும் பயன்படுத்தலாம். அதாவது, இது அந்த பெண் திருமணமானவளா அல்லது திருமணமாகாதவளா என்பதைக் குறிப்பிடாது; எதிரில் இருப்பவர் பெண் என்பதைக் குறிக்கும்.
Mrs. (உச்சரிப்பு: [மிஸஸ்]) என்பது திருமணமான பெண்களை (வயதினைப் பொருட் படுத்தாமல்) அழைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது.
Miss (உச்சரிப்பு: [மிஸ்]) என்பது இளம், திருமணம் ஆகாத பெண் அல்லது (18 வயதிற்கு உட்பட்ட) சிறுமிக்கு பயன்படுத்தப்படும் பட்டம். Miss என்ற பதம் எப்போதும் சிறுமிகளுக்கும் (பெண் குழந்தைகளுக்கும்) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
திருமணமான பெண்களுக்கு Mrs. பதிலாக Ms. அய் பயன் படுத்தலாம். ஆனால் திருமணமான பெண்களுக்கு Miss பதத்தை பயன்படுத்த முடியாது.
திருமண நிலை தெரியவில்லை என்றால், Ms. என்பதையே பயன்படுத்தலாம். Ms. மரியாதைபூர்வமானதும், நவீன மானதும், திருமண நிலையைப் பற்றி யாதொரு பாகுபாடு காட்டாததும் ஆகும்.
வரலாறு
ஆரம்பம்: 1700- முன், ஆண்களுக்கு Mr. மற்றும் பெண்களுக்கு Mrs. என்ற இரண்டு பட்டங்கள் மட்டும் இருந்தன. ஆரம்ப காலத்தில், Mrs. என்ற பட்டம் பெண் என்பதற்கான சொல் ஆக பயன்படுத்தப்பட்டது.
சிக்கல்கள்: 1700களில், பாலின சமத்துவத்தில் ஒரு பெரிய பின்தள்ளல் நிகழ்ந்தது. பெண்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் திருமண நிலையை பிரதிபலிக்க வகுப்பாய்ந்து பிரிக்கப்பட்டன. Ms. என்ற சொல் திருமணமாகாத இளம் பெண்களுக்கான பட்டம் ஆக உருவெடுத்தது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், திருமண நிலையை பொருட்படுத்தாமல் மரியா தையின் அடையாளமாக Mrs. பட்டம் பயன்படுத்தப்பட்டது.
சோகம்:
பெண்களை அவர்களது கணவரின் முதல் பெயர் மற்றும் குடும்பப்பெயர் சேர்த்து அழைக்க ஆரம்பித்தபோது நிலைமை இன்னும் மோசமாகியது! உதாரணமாக, Mrs. ராஜா என்றால், அந்தபெண்ணின் பெயர் தெரியாமல், அவர் Mr. ராஜா என்பவரின் மனைவி என்று மட்டுமே குறிக்கப்படுகிறது.
மீட்டெடுக்கப்படும் நிலைமை:
1950–60களில்: பெண்கள் திருமண நிலைமையால் மட்டுமே அடையாளம் காணப்படுவதை எதிர்த்து பெண் உரிமை இயக்கங்கள் (Feminist movements) போராட்டங்கள் நடத்தின.
1961: ஷீலா மைக்கல்ஸ் (Sheila Michaels) என்ற பெண் “Ms.” என்ற பட்டத்தை அறிமுகம் செய்து, இது திருமண நிலையில் சார்பற்ற ஒரு நடுநிலை (neutral) பட்டமாக பிரகடனம் செய்தார்.
1980-களில், “Ms.” என்பது தொழில்முறை மற்றும் அதிகாரப் பூர்வ சூழல்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது ஒரு பெண்ணின் திருமண நிலை தெரியாத போது அல்லது அதை வெளிப்படுத்த தேவை இல்லாத போது மற்றும் சுயமரியாதையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
#NoToMrs Movement
இது 2018ஆம் ஆண்டில் மென்பொருள் பொறியாளர் பேரஹத் பகேரி (Behrad Bagheri) பயன்படுத்திய ஒரு சமூக ஊடக ஹேஷ்டேக் ஆகும்.
#NotoMrs என்ற ஹேஷ்டேக், “திருமதி” (Mrs.) மற்றும் “செல்வி” (Miss) போன்ற திருமண நிலையை அடிப்படையாகக் கொண்ட பட்டங்களை நீக்குவதை வலியுறுத்தும் ஒரு இயக்கமாகும். இக்குழுவின் குறிக்கோள், அனைத்து பெண்களையும் திருமண
நிலைக்கு பின் வைத்து
பார்க்காமல் சமமான முறையில் நடத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதே ஆகும்.
Mrs. மற்றும் Miss மாற்றாக “Ms.” போன்ற பொதுவான பட்டத்தை பயன்படுத்துவது ஆண் பெண் சமத்துவத்தை மேம்படுத்தும்.
– அருள் வல்லரசி