* நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது
* சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் பல்லையும், எலும்பையும் உறுதிப்படுத்துகிறது.
* அதிகமாக உள்ள கலோரிச் சத்தினால் இவ்வுணவை உண்டு பின்பு சத்தானது உடலுக்கு உடனே கிடைக்கிறது.
* குடலிலிருந்து சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.
* ஒரு சில புற்று நோய்கள் வராமல் தடுக்்கிறது.
* அதிக எடையைக் குறைக்கிறது
* அஜீரணத்தை ஏற்படுத்தாது. மற்றும் எந்த விதமான ஒவ்வாமையையும் உண்டாக்காது.
* கம்பு, ராகி, போன்றவற்றின் கஞ்சி கோடையில் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.
* இவை தவிர இந்தச் சிறு தானியங்களுக்குச் செயற்கை உரமோ அல்லது பூச்சிக் கொல்லி மருந்தோ உபயோகப்படுத்துவதில்லை.
ஆகையால் இந்த உணவு நச்சுப்பொருள் ஏதும் கலக்காத இயற்கை உணவாகும்.