மயக்க மருந்தின் முக்கியத்துவம்

மருத்துவர் த.அருமைக்கண்ணு
(மயக்கவியல் நிபுணர்)

நான் 23 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். பொதுமக்களுக்கு அதிகம் அறியப்படாத மயக்க மருத்துவம், மயக்கவியல் என்பது குறித்துத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

பொதுமக்களுக்கு இந்த மருத்துவரோடு நேரடி தொடர்பு இருப்பது இல்லை. அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர் அறுவை சிகிச்சை மருத்துவரால் எங்களிடம் மயக்கம் கொடுக்க Fitness-க்காக அனுப்பப்படுவார். அறுவை சிகிச்சை  Surgery)  செய்ய வேண்டுமெனில் அவசியம் மயக்க மருத்துவர் தேவை. மயக்க மருத்தவரால் வலி நீக்கி (Pain Relief) மயக்கம் கொடுக்கப்பட்டால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

வலி ஏற்படாமல் தடுக்க

அறுவை சிகிச்சை தேவைப்படு வோருக்கு, அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் தடுக்கிறது. சில அவசர மருத்துவ நிலைகளிலும் நோயாளிகளுக்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. மயக்க மருந்துகளை பெரும்பாலும் நரம்பு  வழியாக, ஊசி மூலமாகவோ சில சமயங்களில் வாய் வழியாகவோ கொடுக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் காலம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நட்டம் போன்றவற்றை தொடர்ந்து நிர்வகிப்பது மயக்க மருந்து நிபுணரின் பொறுப்பாகும்.

மயக்க மருத்துவர் பணி:

மயக்கம் கொடுக்க தகுதி உடையவரா என கண்டறிதல் (Fitness), நோயாளியை பரிசோதித்து ( மருத்துவ பரிசோதனைகள் மூலம்), பல்வேறு தேவையான (Relevant) பரிசோதனைகள், இரத்த பரிசோதனை (Blood Test), X Rays, • ECG, • Echo,etc.,(வியாதிக்கு ஏற்றாற் போல்), வேறு வியாதிகள் இருந்தால் உரிய மருத்துவர் Opinion பெற்று மயக்கத்துக்கு தகுதி (Fitness) கொடுக்கப்படும். இல்லையெனில் தேவையான சிகிச்சைக்கு பின் Anaesthesia Fitness கொடுக்கப்படும்.

II அறுவை சிகிச்சையின் போது வாந்தி அல்லது மூச்சுக்குழாயில் உணவு (Aspiration) சென்றுவிடாமல் இருக்க திட உணவு 6 மணிக்கு நேரத்திற்கு முன்பும் தண்ணீர் 2 மணிநேரத்திற்கு முன்பும் குழந்தைகளுக்கு தாயப்பால் 4 மணிநேரத்திற்கு முன்பும் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். இது மிகமிக முக்கியம்.

மயக்க வகைகள்: General Anaesthesia:

(முழு (அ) பொது மயக்கம்) இந்த மயக்கம் நீண்ட நேரம் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் தலை, நெஞ்சு பகுதி, மேல் வயிறு, கழுத்துப் பகுதி, கைகள் அறுவை சிகிச்சைக்கு நோயாளியின் Condition ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொடுக்கப்படும். இந்த மயக்கம் இரத்தகுழாய்களில் (Intravenous) மருந்துக் கொடுப்பதன் மூலமும், Anaesthetic gases (வாயுக்கள்) மற்றும் Muscle relaxant கொடுத்தும் மனிதன் முழுதும் வலியற்ற முழுநினைவற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டு அசைவு இல்லாமல் முழு மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டு முழு monitoring care-ல் மயக்க மருத்துவரால் கண்காணிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். முடிந்தபின் மாற்று மருந்து (Reversal agent) மூலம் மயக்கம் தெளிய வைக்கப்படுவர்.

Regional Anaesthesia
(Spinal or Epidural):

முதுகெலும்பு பகுதி தண்டுவட உரைப்பகுதியில் மருந்து செலுத்துவது. இது இடுப்புக்கு கீழ் அடிவயிற்றுப்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கும் கால்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கும் சிசேரியனுக்கும் தரப்படுவது.

Intravenous Anaesthesia:

இதில் இரத்த நாளத்தில் மருந்து செலுத்த (Intravascular) மயக்கமடைய செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிறிது நேர அறுவை சிகிச்சைக்கு (Short Procedure) இதை பயன்படுத்தலாம்  மருந்தின் செயல்படும் காலம் முடிந்ததும் நோயாளி தானாகவே விழித்துக் கொள்வார்.

Nerve Block:

தற்காலிகமாக நரம்பை மருந்துமூலம் block செய்வதால் கை, கால் அல்லது விரல் பகுதிகளில் மட்டும் வலி நீக்கி உணர்விழக்கச் செய்து அறுவை சிகிச்சை செய்யலாம்.

Local Anaesthesia:

தேவையான சிறிய பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய மருந்தை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய இடத்திற்கு மட்டும் செலுத்தி, வலியை நீக்கி அறுவை சிகிச்சை செய்வது. இது சில மணிநேரம் செய்யலாம். இதில் மனிதன் சுய நினைவுடன் இருப்பார்.

Aanesthetic Management :

நோயாளி அறுவை அரங்குக்கு செல்லும் முன் மறுபடியும் மயக்க மருத்துவரால் மருத்துவரீதியாக (Clinically) பரிசோதிக்கப்படுவார். அறுவை அரங்கில் Monitors Connect பண்ணப்படும். பின்னர் மயக்கவியல் மருத்துவர் மயக்கம் கொடுப்பார். மயக்கம் கொடுத்தபிறகு அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சையின் போது நோயாளி மயக்கவியல் நிபுணரின் முழு பொறுப்பில் கண்காணிப்பில் இருப்பார். Pulse, Bp, Spo2, Oxygen  அளவு ஆகியவை கண் காணிக்கப்படும். இரத்தப்போக்கு (Blood loss) அதிகமானால் உடன் இரத்தம் ஏற்பாடு செய்து உடன் தேவையான அளவு செலுத்தி நோயாளியை Normal,Pulse, Bp-ல் Maintain பண்ண வேண்டிய முழு பொறுப்பும் மயக்கவியல் நிபுணருடையது. எல்லா உறுப்புகளின் செயல்பாடும் பராமரிப்பதும் மயக்கவியல் நிபுணர் பொறுப்பு. அறுவை சிகிச்கை முடிந்து மயக்கம் தெளிந்து வார்டுக்கு செல்லும் வரை முழப்பொறுப்பும் மயக்கவியல் நிபுணருடையது. இவ்வாறு நோயாளி சிகிச்சை முடிந்து சிகிச்சைக்கு முன் இருந்த Normal நிலைக்கு வந்ததும் வார்டுக்கு மாற்றப்படுவார். இவ்வாறாக நோயாளிக்கு மயக்கவியல் நிபுணரால் மயக்கம் கொடுக்கப்படுகிறது. மயக்கவியல் நிபுணர் பணி மிக முக்கியத்துவமான ஒன்று.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *