அக்டோபர் 13, 1884, அன்று பன்னாட்டு நேரம் கணக்கிடும் இடமாக இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் தேர்வு செய்யப்பட்டது
இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் பன்னாட்டு நேர மண்டலங்களின் மய்யப் புள்ளியாகவும், பூஜ்ஜிய தீர்க்கரேகை யாகவும் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பூமி உருண்டை என்று விஞ்ஞான ரீதியாக உறுதியான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உலகளாவிய இருப்பிட அளவீட்டுக்குத் தொடக்கமாகக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் உலகெங்கிலும் உள்ள நாடுகள் பொது வான ஒரு வரைபட அமைப்பைப் பயன் படுத்தவும், துல்லியமான கடற்பயணத்தை மேற்கொள்ளவும், ரயில்வே போன்ற போக்குவரத்து வலைய மைப்புகளைத் திட்டமிடவும் முடியும்.
இந்த நோக்கத்திற்காக, பூமியில் உள்ள இடங்களை எளிதாக அடையாளம் காண உதவும் வகையில், கடக ரேகை (Latitude) மற்றும் தீர்க்க ரேகை (Longitude) போன்ற கற்பனைக் கோடுகளை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
கடக ரேகைகள் (அட்ச ரேகைகள்): இவை பூமத்திய ரேகைக்கு இணையாகக் கிழக்குமேற்காகச் செல்லும் கோடுகள். பூமத்திய ரேகை ‘0’ டிகிரியாகக் கருதப்படுகிறது. தீர்க்க ரேகைகள்: இவை வடக்கு மற்றும் தெற்கு துருவங்களை இணைத்துச் செல்லும் செங்குத்துக் கோடுகள்.
‘0’ டிகிரியில் கிரீன்விச்
கடக ரேகை, தீர்க்க ரேகை ஆகிய கற்பனைக் கோடுகள் அனைத்தும் சந்திக்கும் ஒரு மய்யப்புள்ளியை ‘0’ டிகிரி என நிர்ணயிக்க வேண்டிய தேவை எழுந்தது. இந்த மய்யப்புள்ளி, அதாவது பூஜ்ஜிய தீர்க்கரேகையாக (0° Longitude), லண்டனில் உள்ள கிரீன்விச்சில் இருக்கும் ராயல் ஆய்வகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் தெரிவானது, உலகின் பெரும் பாலான கடல்வழி வரைபடங்கள் ஏற்கெ னவே கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெரும்பாலான நாடுகளுக்கு எளிதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருந்தது.
கிரீன்விச் ஆய்வகத்தின் வழியாகச் செல்லும் இந்த முதன்மைக் கோடு உலக நேர மண்டலங்களுக்கும், இருப்பிடத் தகவல் அமைப்புகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
இந்தத் தீர்க்கரேகையை ஆதாரமாகக் கொண்டே மற்ற நேர மண்டலங்கள் கணக்கிடப்படுகின்றன. கிரீன்விச் நேரத்தை GMT (Greenwich Mean Time) என்று அழைத்
தனர்.
தற்போது இது துல்லியமான நேரத்திற் கான உலகளாவிய தரமான ஒருங்கிணைந்த உலக நேரம் (UTC Coordinated Universal Time) என்பதன் மிக நெருங்கிய வடிவமாகப் பயன்படுத்தப்படுகிறது.