உயர் கல்விக் கண்காட்சியை நடத்தும் ஜார்ஜியா தூதரகம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 20-உயர்கல்வி கற்க மாணவர்களுக்கு உதவுவ தற்காக, ஜார்ஜியா தூதரகம் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு கல்விக் கண்காட்சிகளில் ஒன்றை நடத்துகிறது. இரண்டாவது பதிப்பான இந்த நிகழ்வு ஜார்ஜியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்திய மாண வர்கள் படிப்பதற்கான பயணத்தை விரைவுபடுத்துவதற்குத் தேவையான உத்திகளை வழங்குவதில் கவனம் செலுத்தும். 

இந்த நிகழ்வு மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை யில் முறையே ஜியோ கன்வென்ஷன் சென்டர், சான்சரி பவிலியன் ஹோட்டல் மற்றும் அக்கார்ட் மெட்ரோபொ லிட்டன் ஹோட்டல் ஆகியவற்றில் மே 30, ஜூன் 1 மற்றும்2 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. ஜார்ஜியா வைச் சேர்ந்த சுமார் 11 பல்கலைக்கழகங்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத படிப்புகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் சலுகைகளையும், படிப்புகளையும் வழங்குகின்றன. 

இந்த அறிவிப்பைப் பற்றி கருத்து தெரிவித்த ஜார் ஜியாவின் தூதர் அர்ச்சில் துலுயாஷ் விலி, “ஒரே கூரையின் கீழ் ஒரு ஜார்ஜியன் கல்லூரியில் சேருவது குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டு வரும் வகையில் வெறும் 6 மாதங்களுக்குள் மற்றொரு நிகழ்வை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு நாள் முழுக்க நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏராள மான தகவல்கள் வழங்கப்படுவதுடன் அவர்களின் மேற் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அவர்களுக்கு உதவுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கல்வி – சமூக நீதி மாநாடு

சென்னை, மே 20- மும்பையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பாரத் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்க பல முக்கிய தலைவர்கள் ஒப்புதல் வழங்கி யுள்ளனர்.  2,500க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும் என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மக்களவை மேனாள் தலைவர் சுமித்ரா மகாஜன், “பல்வேறு பகுதி களைச் சேர்ந்த எம்.எல்.சி.-க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் ஒன்றுகூடி, நிலைத்ததன்மை சார்ந்த பிரச்சினைகள், பார்வைகளை பரிமாறிக்கொள்வது மற்றும் அந்தந்த மாநி லங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்து கற்றுக் கொள்வார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களிடையே தொடர்பையும் புரிதலையும் இதுபோன்ற கூட்டங்கள் எளிதாக்குகின்றன. மேலும் தொகுதிகளைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.

சமீபத்திய நிகழ்வின்போது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய மக்களவை மேனாள் தலைவர் டாக்டர் மீரா குமார், “சமூக நீதி, பன்னாட்டு உறவுகள், கல்வி உள்ளிட் டவை தொடர்பான பல பிரச்சனைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த மாநாட்டில் கிடைக்கும் கற்றலை நாம் முறையாக ஆவணப்படுத்த வேண்டும். அதன்மூலம் இன்னும் பல ஆண்டுகள் கழித்து அது ஒரு கற்றல் ஆவணமாக மாறும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *