சென்னை, அக்.12- அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது இளைஞர்கள் பலருடைய கனவாகும். தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்கு அடுத்து, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (ஆர்ஆர்பி) நடத்தப்படும் தேர்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்நிலையின் தற்போது 5800 என்டிபிசி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட் டுள்ளது ஆர்ஆர்பி. இந்த வேலையில் சேர் வதற்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங் களை ரயில்வே ஆட் சேர்ப்பு வாரியம் அவ்வ ப்போது நிரப்பி வருகிறது அவ்வகையில் என்டிபிசி பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு: ரயில்வே துறை விதிகளின்படி என்டிபிசி பணியிடங்களுக்கு விண் ணப்பிக்க 33 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டு தளர்வுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் அளிக்கப்படும்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 5,800
காலிப் பணியிடங்களின் விவரம்: டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர், பயணச்சீட்டு சூப்பர்வைசர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், சரக்கு ரயில் மேலாளர், சீனியர் கிளர்க், தட்டச்சர் மற்றும் போக்குவரத்து உதவியாளர். என்டிபிசி பணியிடங்களுக்கு விண் ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21-10-2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-11-2025
தேர்வு முறை: விண் ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வுக்கு முன்பாக ஹால் பயணச்சீட்டு வழங்கப்படும். முதல் கட்ட தேர்வாக கணினி வழி தேர்வாக நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்டமாக ஆவணம் சரிபார்ப்புகள் நடை
பெறும். இறுதியாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படு
வார்கள்.