உலக செய்திகள்

இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை

அள்ளி கொடுக்கும் அய்ரோப்பிய நாடு

புக்கரெஸ்ட், அக். 12- டிரம்ப் அதிபரான பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் வாழ்வது மிகவும் கடினமான மாறி வருகிறது. டிரம்ப் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேநேரம் இங்கு மற்றொரு அழகிய அய்ரோப்பிய நாடு மிகக் குறைந்த நிபந்தனைகளுடன் நிரந்தரக் குடியுரிமையைக் கொடுத்து வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

அய்ரோப்பாவில் உள்ள குட்டி நாடான ருமேனியா தான் இப்போது வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமைகளை அள்ளி கொடுக்கிறது.. இங்குள்ள பிரம்மாண்ட வரலாற்றுக் கோட்டைகள், பனி படர்ந்த மலைகள், மற்றும் மனதை மயக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு மத்தியில் வாழவும், பணியாற்றவும் விரும்புபவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்காக ருமேனியா ஒரு நிரந்தரக் குடியுரிமை திட்டத்தை வழங்குகிறது. அய்ரோப்பிய நாடுகளில் வசிப்போர் மட்டுமின்றி, இந்தியா உட்பட எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களும் எளிதாக ருமேனியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும். நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்டால் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ருமேனியாவில் வாழவும், பணியாற்றவும், படிக்கவும் முடியும்.

இருப்பினும், இதில் ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே இருக்கிறது. அதாவது நீங்கள் நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் முன்பு, குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகள் ருமேனியாவிலேயே வசித்தும், பணியாற்றியும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியமான நிபந்தனையாகும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நீங்கள் அய்ரோப்பிய ஒன்றியம் அல்லது அய்ரோப்பிய பொருளாதாரப் பகுதியைச் சேராதவராக இருக்க வேண்டும்.

ருமேனியாவில் குறைந்தது அய்ந்து ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். உரிய விசாவுடன் சட்டத்திற்கு உட்பட்டு வசித்திருந்தால், இந்தக் குடியுரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 750 யூரோக்கள் (சுமார் ₹77,834) நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வருமானம் இருக்க வேண்டும்.

உரிய மருத்துவக் காப்பீடு, ருமேனியாவில் தங்க ஒரு வசிப்பிடம் இருக்க வேண்டும்.. அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  ருமேனிய மொழி ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தேசியப் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் இல்லாதவராக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலே போதும் ஒருவர் சுலபமாக நிரந்தரக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மற்ற நாடுகளில் இருக்கும் நிபந்தனைகளை விட ருமேனியாவில் குறைவாகவே இருக்கிறது. எனவே, அய்ரோப்பாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி

ருமேனியாவில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும்.

செல்லுபடியாகும் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்), தற்காலிகக் குடியுரிமை அனுமதி (விசா), தங்குமிடச் சான்று, வருமானச் சான்று, மருத்துவக் காப்பீட்டுச் சான்று ஆகியவை தேவைப்படும். ருமேனிய மொழியில் புலமைக்கான ஆதாரம் மற்றும் தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் தயாராக வைத்திருங்கள்.. இந்தியாவிலுள்ள ருமேனிய தூதரகத்தில் இந்த நிரந்தரக் குடியுரிமைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான நிர்வாகக் கட்டணமாக 14 யூரோக்கள் (சுமார் ₹1,447) செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். எனவே, அதற்கேற்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். அடுத்து உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். இதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.. ஆனால் இந்தக் கால அளவு மாறுபடலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், 5 முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியுரிமை அட்டை உங்களுக்கு வழங்கப்படும். அதைப் புதுப்பித்துக் கொள்வதும் எளிது.

யாருக்கு பொருந்தும்?

இது ஒரு தனிநபர் ருமேனிய PRக்கு விண்ணப்பிக்கும் முறையாகும். அதேநேரம் குடும்பத்தினருக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும்போது, வேறு சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். மேலும், அதன் நடைமுறை கூட வேறு!

மாநில தேர்தல் அதிகாரிக்கு மம்தா எச்சரிக்கை:
வீடியோ ஆதாரங்களை கேட்கும் தேர்தல் ஆணையம்
 

கொல்கத்தா, அக். 12- மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆனால், மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியல் திருத்த பணியை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்காள மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட காணொலி காட்சியை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநில தேர்தல் அதிகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *