கீழப்பாவூர், அக். 12- மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்திற்கு நேற்று (11.10.2025) காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது
மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமை யேற்று தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டால் ஏற்பட்டுள்ள பயன்பாடுகளை விளக்கியும், பெரியார் உலகத்திற்கு ஒவ்வொருவரும்,நிதிதரட்டி அளிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி யும்உருக்கமாக உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாவட்டத் துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், கீழப்பாவூர் கழகத் தலைவர் இராமசாமி, ஆலங்குளம் கழக பொறுப்பாளர்கள் பெரியார் குமார், செல்வமணி, மேலமெஞ்ஞானபுரம் தங்கராசு, கீழப்பாவூர் இல.அன் பழகன்,ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
28.10.2025 அன்று தென்காசி வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆலங்குளத் தில் சிறப்பான வரவேற்பு அளிப்ப தென தீர்மானிக்கப்பட்டது.
28.10.2025 அன்று காலை 10.30மணிக்கு தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் தென்காசி மாவட்டக்கழகம்சார்பில் ரூ.10.-இலட்சம் நிதிதிதிரட்டி அளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக பி.விஜி நன்றி கூற கலந்துரையாடல் கூடடம் நிறைவு பெற்றது.