கண்கொடுத்தவணிதம், அக். 12- நேற்று (11.10.2025) கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்தவணிதத்தில் மறைவுற்ற கோ.ரத்தினம் படத்தினை, ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் என்.நேரு, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் வீரப்பன், துரைராஜ் மற்றும் கிராம மக்கள் பங்கு பெற்றனர்.
கோ.ரத்தினம் அவர்களுக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கோ.ரத்தினம் படத்திறப்பு

Leave a Comment