உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு கடந்த மாதம் தொண்டராம்பட்டில் ரூ.17 இலட்சம் வழங்கப்பட்டது.
நேற்று (11.10.2025) மாலை உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.செகநாதன், தலைமையில், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலையில், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டுஅ.இராமலிங்கம், பெரியார் வீரவிளையாட்டுக் கழகப் பொறுப்பாளர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன், வியன் நிலம் விற்பனையக வழிகாட்டுநர் புலவர் இரா.மோகன்தாசு ஆகியோர் தோழர்கள் புடைசூழ, வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களிடம் இரண்டாம் தவணையாக ரூ.3 இலட்சம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.உ.பர்வீன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் க.மாரிமுத்து, ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.இரஞ்சித்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நிரஞ்சன் குமார், கலைமாமணி மன்றோ மதியழகன் ஓட்டுநர் செந்தில்.