இன்னும் அவர்கள் பாடம்
கற்கவில்லை என்பதையே காட்டுகிறது!
கற்கவில்லை என்பதையே காட்டுகிறது!
செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தஞ்சை, அக்.12 – கரூர் நெரிசல் உயிரி ழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (11.10.2025) தஞ்சையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்தார்.
செய்தியாளர்: கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரி ழப்புகளுக்குப் பல சமூக விரோதிகள் சக்திகள்தான் காரணம் என்று உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். அதற்குத் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: தவறு செய்தவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய நேரத்தில், இன்னமும் பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல், தவறான வழியிலேயே அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.
பல உயிர்களைப் பறிகொடுத்தும்கூட இன்னமும் அவர்கள் பாடம் பெற வில்லையென்றால், இது மிகப்பெரிய ஒரு கெட்ட வாய்ப்பாகும்.
எனவே, இன்னமும் மக்களைத் திசை திருப்புவதில்தான் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
நடைமுறையில்
வெற்றி பெற முடியாது!
வெற்றி பெற முடியாது!
ஆனால், இந்த வண்டி ரொம்ப நாள்கள் ஓடாது. திரைக்கதை வசனங்க ளுக்கு அது சரியாக இருக்கலாம்; நடைமுறையில் அது வெற்றி பெற முடியாது.
– இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டி யளித்தார்.