லக்னோ, அக்.11- உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (10.10.2025) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
அடையாளம் தெரியாத பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது 5 பேர் உடல் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்தது.
வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.