டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 12,480 கிராமங்களில் இன்று கிராம சபைக் கூட்டம்/ தெரு, சாலைகளில் ஜாதி பெயர் நீக்குவது தொடர்பாக தீர்மானம்: காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கடந்த ஆறு மாதங்களாக ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்குவதாக கூறி வெற்றி பெறாமல் இருந்த பழனிசாமி, தற்போது, த.வெ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்த முடியுமா? என வாய்ப்பு தேடுகிறார்.
தி இந்து:
* கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதற்கு நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை சிறந்த அய்பிஎஸ் அதிகாரியான அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்அய்டியே தொடரலாம் என்றும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை சிபிஅய்க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.
தி டெலிகிராப்:
* இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களில் சமூக நீதி புறக்கணிக்கப்படுமா? என்ற கவலையை டில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெளிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
– குடந்தை கருணா