சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மதநம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேசச் சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மதநம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானவை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். இவைப் பொருத்த வரையில், அபிப்பிராயப் பேதம் இருக்கும் ஒருவர் சமதர்மவாதி எனத் தம்மைக் கூறிக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’