புகழ் புத்தகாலயம் பதிப்பாள ரும், ‘திருக்குறிப்புத் தொண்டர்’ இதழை நடத்தி வந்தவரும், கவிஞர் தமிழ்ஒளி மறைவிற்குப் பிறகு – அவர் தம் கவிதை நூல்களை வெளியிட்டு வந்தவரும், புரட்சிக் கவிஞர் விழாவில் நமது இயக்கத் தால் பாராட்டப்பட்டு ‘பெரியார் விருது’ அளிக்கப்பட்டவருமான சுயமரியாதை வீரர் செ.து.சஞ்சீவி அவர்கள் (வயது 94) வயது மூப்பால் நேற்று (20.5.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவர் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தி னருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அன்னாரின் இல்லத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
துணைத் தலைவருடன் வடசென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.