தஞ்சாவூர், அக். 11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சாவூர் மாநகர கழக சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா நிகழ்ச்சி 10.10.2025 மாலை 6:30 மணி முதல் 9 மணி வரை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகர கழகத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர கழக செயலாளர் இரா.வீரக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
திமுக தஞ்சை மாநகரப் பொருளாளர் காளையார் சரவணன், பெரியார் பெருந்தொண்டர் வடசேரி முத்து. இராஜேந்திரன், தஞ்சை கா.மா. குப்புசாமியின் மகன் கு. பன்னீர்செல்வம், பொறியாளர் சு.கீதப்பிரியர், பொறியாளர் கோ. ரவிச்சந்திரன், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் ப. திருநாவுக்கரசு, அகில இந்திய மகளிர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சொர்ணலட்சுமி சூரியமூர்த்தி, திமுக முன்னோடி பண்டரிநாதன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகராட்சி மேயர் திமுக நகர செயலாளர் சண். இராமநாதன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட தலைவர் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் பி. ஜி, இராஜேந்திரன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா,ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்ட 25,02,000 நிதியை பெற்றுக் கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர் பா.நரேந்திரன் நன்றியுரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பு
தஞ்சாவூர் மாநகர கழக தலைவர் செ.தமிழ்ச்செல்வன் மாநகர செயலாளர் இரா.வீரகுமார் ஆகியோர் இணைந்து விழாக் குழு சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்து மகிழ்ந்தனர்
நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், கழக சொற்பொழிவாளர் கோ. செந்தமிழ்ச்செல்வி திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பழகன் மாவட்ட மாணவர் கழக தலைவர் சிந்தனையரசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வள்ளியம்மை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம், பாக்கியம் ஏகாம்பரம் திருவையாறு ஒன்றிய கழகத் தலைவர் கண்ணன் ஒரத்தநாடு நகர கழகத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் ஜெகநாதன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாநல். பரமசிவம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டுஅ. இராமலிங்கம், தஞ்சை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், துணைத் தலைவர் துரை துணைச் செயலாளர் விஸ்வநாதன், மாமன்ற உறுப்பினர் ரம்யாசரவணன், மாவட்ட விவசாய அணி தலைவர் வளப்பக்குடி பாலசுப்பிரமணியன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் மாரிமுத்து, தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் வே.துரை செயற்குழு குழு உறுப்பினர் குழந்தைசாமி, சமூகத் தொடர் கல்விக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் பொன்னரசு, பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, திமுக கலை இலக்கிய அணி பொறுப்பாளர் களிமேடு கலைமணி செல்வம், வடசேரி ஜனார்த்தன், ஒரத்தநாடு தெற்கு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ராஜதுரை, இபி காலனி பகுதி செயலாளர் பரந்தாமன், வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரிசாமி, விக்கிரவாண்டியம் மணி,திருவையாறு நகரத் தலைவர் கௌதமன் முருகேசன், முருகேசுவரி சித்திரகுடி பழனிராசன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் தோழமைஇயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பெரியார் உலகம் நிதி திரட்டிட உழைப்பை நல்கிய தோழர்களுக்கு பாராட்டு
10 நாட்களாக தஞ்சை மாநகரத்தில் ‘பெரியார் உலகம்’ நிதி திரட்டிட அயராது உழைத்த கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் ,மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் மாநகர செயலாளர் இரா.வீரகுமார், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் துணைத் தலைவர் ஆ.டேவிட், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார்.