‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கினர்
தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்ட ரூ.25,02,000 நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர்.

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் மற்றும் அவரது மகள் வழக்குரைஞர் கவுசல்யா ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000. காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் மாநகர் மாவட்ட தலைவர், தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்ட தலைவர் பி.ஜி.இராஜேந்திரன் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000. தஞ்சாவூர் விடுதலை வாசகர் வட்ட புரவலர் பொறியாளர் கோ. இரவிச்சந்திரன், பொறியாளர் சு.கீதப்பிரியா ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.2,00,000.

பெரியார் பெருந்தொண்டர் வடசேரி முத்து.ராஜேந்திரன்- இரா. ஜனார்த்தனி ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000. கழக சொற்பொழிவாளர் தலைமை ஆசிரியர் கோ. செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியர் இரா.சிவக்குமார் ஆகியோர் (திருவாரூர்) பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000. அகில இந்திய மகளிர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தொழிலதிபர் சொர்ண லட்சுமி – சூரியமூர்த்தி பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000.

தி.மு.க. தஞ்சை மாநகர செயலாளர், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000. திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர், தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி-திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிக்குமார் ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000. தஞ்சாவூர் மனையேரிப்பட்டி ஆர்.வி.எஸ். விவசாயக் கல்லூரி சார்பில் தஞ்சாவூர் திமுக நிர்வாகி பண்டரிநாதன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000. தஞ்சாவூர் சமூகத் தொடர்க் கல்வி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி மூலமாக திரட்டப்பட்ட நிதியை புவனேஸ்வரி- கேசவன் ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.55,000.


* சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா. குப்புசாமி நினைவாக அவரது மகன் கு. பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதியாக ரூ.25,000. *தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் தமிழாசிரியர் ப. திருநாவுக்கரசு பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000.
*தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம் – அவரது மகன் முனைவர் கலைமணி ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000. lதஞ்சாவூர் மாநகர தி.மு.க. பொருளாளர் காளையார் சரவணன், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினர் ரம்யா சரவணன் ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000. lசுயமரியாதைச் சுடரொளி கண்ணுகுடி தண்டாயுதபாணி நினைவாக அவரது வாழ்விணையர், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வள்ளியம்மை பெரியார் உலகம் நிதியாக ரூ.5,000. l விக்கிரபாண்டியம் மணியம், வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரிசாமி ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ரூ.2,000.
