திருப்பதி, மே 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். திரு மலை, திருப் பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர் கள் வழிபாடு முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பின்னர் லட்டுக்காக அங்குள்ள கவுண்ட்டர் களில் நீண்ட நேரம் காத்திருக்கின் றனர்.
இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளிச் சந்தை யில் விற்பனை செய்யப் படுகின்றன. லட்டுகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுகளில் விற்பனை கவுண்ட்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தது. அந்தத் தகவலின் பேரில் தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் லட்டு களை எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்து வந்தனர்
அப்போது தேவஸ்தான ஊழியர் கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்த 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர். அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவு மாக பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. தேவஸ்தான ஊழி யர்கள் 5 பேரும் திருமலை டவுன் காவல் துறையினரிடம் ஒப்படைக் கப்பட்டனர். 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.