முதுகலை ஆசிரியர் தேர்வு இணையத்தின் மூலம் மாதிரித் தேர்வு

சென்னை, அக்.10 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கியமான வினாக்கள் அடங்கிய இணைய வழியில் (ஆன்லைன்) மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 11-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் அய்.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

முதுகலை ஆசிரியர் தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்களுக் கான தேர்வுவருகிற 12.10.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித் துள்ளனர்.

இந்நிலையில், ஆட்சித்தமிழ் அய்.ஏ.எஸ் அகாடமி சார்பில் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு பயனளிக்கும் விதத்தில், முக்கியமான வினாக்கள் அடங்கிய இணைய வழி மாதிரித் தேர்வுகளை அக்டோபர் 11-ஆம் தேதி (நாளை) ஆன்லைன் வழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரித் தேர்வுகள்

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான இந்த ஆன்லைன் மாதிரித் தேர்வுகள், அக்டோபர் 11-ஆம் தேதி (நாளை) காலை 9.30மணியளவில் நடைபெற உள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்துப் பாடங்களுக்கும் நடைபெறும். வினாக்கள் அரசுத்தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதிரித் தேர்வுக்கான கட்டணம் ரூ.100/- ஆகும். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வில் இந்த அகாடமி நடத்திய மாதிரித் தேர்வுகளில் அதிக அளவிலான வினாக்கள் கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்பதிவு

இந்த மாதிரித்தேர்வுகளை இணைய தள வழியாக எழுத, ‘PG-TRB ONLINE MODEL EXAM-2025’ என்று டைப் செய்து தங்களது ‘SUBJECT மற்றும் முகவரியுடன் 97103 75604 என்ற எண்ணுக்கு ‘வாட்ஸ் அப்’ அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார்.

 

மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களைப்
பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

புதுவை, அக்.10 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களைப் புதுப்பிக்கவும், பதிவு செய்யவும் வேண்டும் என்று புதுவை அரசு தொழிலாளா் நலத்துறை 8.10.2025 அன்று அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

புதுவை அரசின் தொழிலாளா் துறை மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாக்க, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம், 1961, மற்றும் புதுவை மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் விதிகள், 1965 ஆகியவற்றை அமல்படுத்தி வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா்களைப் பணியமா்த்தும் பல தனியாா் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூரியா் சேவைகள் மற்றும் தனியாா் வாகன நிறுவனங்கள் தலைமை ஆய்வாளா்/ஆய்வாளரிடம் தங்கள் நிறுவனத்தை இதுவரை பதிவு செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சில நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் பதிவைப் புதுப்பிக்கவில்லை. சட்ட நடவடிக்கைகளைத் தவிா்க்க, அனைத்து நிறுவனங்களின் உரிமையாளா்களும் உடனடியாக தொழிலாளா் துறை இணையதளம் மூலம் தங்கள் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களை உடனடியாக பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *