சென்னை, அக்.10- வருகிற மழைக் காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவ லர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில தொடக்க கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மின்சாரம் பற்றி விழிப்புணர்வு…
* மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளியின் சுற்றுச்சுவர் பாது காப்பற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் அதன் அருகில் மாணவர்கள் செல்வதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்படாத வண்ணம் மின் சாதனங் களையும், மின் கம்பிகளையும் எச்சரிக் கையுடன் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் தொடாதவாறு கண்காணிக்க வேண்டும். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மழைநீர்
* பள்ளியில் உள்ள ஒவ்வொரு கட்டடத்தின் மேற்கூரையிலும் மழைநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிவதற்கான துவாரங்கள் இலை, தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மழைக்காலங்களில் பள்ளி வளாகத் திற்குள் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையாக பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.
* மழைக்காலங்களில் மாணவர்கள் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும், அந்த சமயத்தில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் அறிவுரை வழங்க வேண்டும்.
பராமரிப்புப் பணிகள்
*பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள பழுதுகள் மற்றும் குறைகளை சரி செய்ய மாணவர் களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.
*100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை உரிய அலுவலர்கள் மூலம் அனுமதி பெற்று, பள்ளி பராமரிப்பு பணிகளை சீர்செய்து கொள்ள நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.