தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் எம் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி எஸ். நிவேதிதா இரண்டாம் இடமும், மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் 7ஆம் வகுப்பு மாணவி சாத்விகா மூன்றாமிடத்தை வென்று கோப்பைபையும் பி.எம். சான்றிதழ்களையும் பெற்றனர்.
முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவி ஜெ. சிறீஸா தங்கப்பதக்கம் வென்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
3ஆவது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 7ஆம் வகுப்பு மாணவி எம். ரிஷிதா தங்கப்பதக்கத்தையும், கோப்பையையும் வென்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.