வல்லம், அக். 10- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் மண்டல அளவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் (Games) முதலிடம் பெற்று சாம்பி யன் பட்டம் (Overall Championship) வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஆளுமை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளில் மாண வர்கள் சிறப்பாக பங்குபெற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள சங்கம் (Inter Polytechnic Athletic Association) பாலிடெக்னிக் மாண வர்களிடையே தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத் துடன் ஒவ்வொரு ஆண்டும் தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றது.
சதுரங்கம் – மேஜைப் பந்து போட்டி
2025-2026ஆம் ஆண்டிற்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (Games) பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற்றது. 21.08.2025 அன்று பாபநாசம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் (Chess) கலந்து கொண்ட நான்கு மாணவிகள் அடங்கிய குழு முதலிடம் வென்றது. அன்று நடைபெற்ற மேஜைப் பந்து (Table Tennis) போட்டியில் மாணவிகள் குழு இரண்டாம் இடம் வென்றது. மேலும் அன்று நடைபெற்ற கேரம் (Carrom) போட்டியில் மாணவிகள் குழு நான்காவது இடம் பெற்றது.
முதலிடம் வென்று சாதனை
15.09.2025 மற்றும் 16.09.2025 ஆகிய நாட்களில் இராயவரம், சுப்ரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கையுந்து பந்து (Volley Ball) எறிபந்து (Throw Ball) வளையபந்து (Tenni Koit) கபடி (Kabadi) ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 12 மாணவிகள் அடங்கிய குழு முதலிடம் (Winner) வென்று சாதனை படைத்தது. அன்று நடைபெற்ற பூபந்து போட்டியில் (Ball Badminton) மாணவிகள் குழு மூன்றாமிடம் வென்றது.
11.09.2025 அன்று வல்லம், சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இறகுபந்து (Badminton) போட்டியில் மாணவிகள் குழு மூன்றாமிடம் பெற்றது.
சிறகு பந்து போட்டியில் முதலிடம்
11.09.2025 அன்று வல்லம், சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்களுக்கான இறகுபந்து (Badminton) விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்ற 4 மாணவர்கள் அடங்கிய குழு முதலிடம் வென்று (Winner) சாதனை படைத்தது. 23.09.2025 அன்று ஆவணம், டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் (Throw Ball) 12 மாணவர்கள் அடங்கிய குழு முதலிடம் (Winner) பெற்றது. 29.09.2025 அன்று புதுக்கோட்டை சுதர்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கூடைபந்து (Basket Ball) போட்டியில் 12 மாணவர்கள் அடங்கிய குழு நான்காமிடம் பெற்றது.
ஒட்டு மொத்த
வாகையர் பட்டம்
வாகையர் பட்டம்
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகள் குழு ஒட்டு மொத்த வாகையர் பட்டம் (Over All Championship) வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக மண்டல அளவில் நடைபெறும் IPAA போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகள் குழு தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒட்டுமொத்த வாகையர் (Over All Championship) பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த வாகையர் பட்டம் வென்று சாதனை படைத்து பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரி துணைமுதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.