“அந்நியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு பலமாய்விடுமே” என்கிற உலக அபிமானமும் பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் ஒருக்காலமும் உண்மையானப் சீர்திருத்தத்திற்கு உதவமாட்டார்கள். அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்வித சீர்திருத்தமும் ஒருக்காலமும் பயனளிக்கவே முடியாது.
மற்றும், சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிவதைக் கைக்கொள்வது தான் சீர்திருத்தத்திற்கு உண்மையான பாதையாகும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது எதுவும் நம் நாட்டைப் பொறுத்தவரை சிறிதும் பயனற்றது.
-தந்தை பெரியார்