தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரத்தின் 6 கேள்விகள்
* பீகாரில் 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் எத்தனை பேர்?
*இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளனர்? அது 90.7 சதவீதமா?
*மீதமுள்ள 9.3% பேர் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் படவில்லை?
*வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதி யில்லாதவை?
*எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன?
*வாக்காளர் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை (அ) நகல் பதிவுகள்?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை: தேஜஸ்வி
பீகாரில் அரசு வேலையில் இல்லாத குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங் கப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், 20 மாதங்களில் அரசு வேலை செய்யாத குடும்பங்கள் பீகாரில் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பீகாரில் வரும் நவ.6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் துயரம்: மற்றொருவர் அதிரடியாக கைது
கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது மருத்துவ அவசர ஊர்தியை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.