சென்னை, மே 22 கேரளா ஸ்டோரி என்ற கற்பனை திரைப் படத்தை குடும்பத்துடன் பார்த்த ஆளுநர் இந்த திரைப்படம் உண் மையை வெளிக் கொண்டு வந் துள்ளது என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தில் இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை என்று பட்டக்குழுவினர் கூறிய பிறகும் ஆளுநர் இவ்வாறு கூறியிருப்பது சிறுபான்மையினர் மீதான வெறுப்பை காட்டுவதாக உள்ளது
உச்சநீதிமன்றத்தில் ’”கேரளா ஸ்டோரி”’ என்ற திரைப்படம் கற்பனைக் கதை, இதில் காட்டப் படும் நிகழ்வுகளுக்கு உண்மை நிகழ்விற்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த திரைப்பட தயாரிப்பாளர் குழு தெரிவித்தது, இதனை அடுத்து நீதிமன்றம் திரைப்படம் துவங்கும் முன்பு இது முற்றிலும் கற்பனைக்கதை என்று டைட்டில் போட்டு வெளியிடவேண்டும் என்று நீதி மன்றம் கூறியுள்ளது. நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச் சகம் லவ் ஜிகாத் தொடர்பாக ஒரே ஒரு வழக்கு கூட பதிவு செய் யப்படவில்லை என்று எழுத்துப் பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இவ்வளவு நடந்தும் இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பொறுப்பில் இருந்தவரும் தற்போது தமிழ் நாட்டின் ஆளுநருமான ஆர்.எஸ். ரவி தனது டுவிட்டர் பக் கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்திய தற்கு நன்றி’ என தெரிவித்துள் ளார்.
நீதிமன்ற தீர்ப்பு, உள்துறை அமைச்சரகத்தின் விளக்கம் இது எதுவுமே ஆளுநர் படிக்கவில் லையா ? இல்லை படித்த பிறகும் நாட்டு நடப்பை படம் விவரிக் கிறது என சிறுபான்மையினரின் மீதான வெறுப்பை வெளிக் காட்ட இப்படிச்சொல்கிறாரா என்று தெரியவில்லை.