போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார்.
அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு, எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்?
எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.
வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம்.
“புத்தர் சமண கழுக்கையர் பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரமாவன அஞ்செழுத்துமே”
இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத் தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.
இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறு கிறார்கள்.
அவர்கள் கூற்றுப்படியே பார்த் தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.
கவிஞர் கலி.பூங்குன்றன்,
மனித வாழ்க்கைக்குத் தேவை நாத்திகமா? ஆத்திகமா? நூலிலிருந்து.,