தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது மூலமும் – இனி ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றே அழைக்கலாம்.
‘மாற்றுத் திறனாளிகள்’ என்பது எப்படி, மனிதத்தை அவர்களுக்குத் தரும் மாற்றுச் சொல்லோ – அதுபோல இவர்களுக்கும் ‘மருத்துவப் பயனாளிகள்’ என்பது மன அழுத்ததை மாற்றக் கூடும் என்பதால் அரசு பரிசீலிக்கலாம் என்ற நாம் விடுத்த அன்பு வேண்டுகோளைத் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து – ஏற்று, ஆணை வழங்கியதைப் பாராட்டி, நன்றி தெரிவிக்கிறோம். உடனடியாக செயலுக்குக் கொண்டு வந்த மருத்துவத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் நமது நன்றி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2025