விருத்தாச்சலம், அக்.9- திராவிடர் கழக விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்றது.
விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீசிவா சிற்றரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் ப. வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். காப்பாளர்கள் அ. இளங்கோவன், அரங்க. பன்னீர் செல்வம், சொற்பொழிவாளர் புலவர் வை. இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியார் உலகத்தின் சிறப்புகள் குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பு குறித்தும் விரிவாகப்பேசினார். இதனையடுத்து, அக்டோபர் 15 ஆம் ஆம்நாள் புதன்கிழமை விருத்தாசலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிப்பது என்றும், பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் 10 இலட்சம் நிதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.கா.ராஜேந்திரன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ. அறிவு, விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி. பாலமுருகன், ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன், செயலாளர் சே. பெரியார்மணி, வேப்பூர் வட்டார செயலாளர் ம. இளங்கோவன், கம்மாபுரம் ஒன்றியத்தலைவர் த. தமிழ்ச்செல்வன், கா. அறிவழகன், இராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.