மயிலாடுதுறை, அக். 9- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெரியார் தொண்டர் கண்டியூர் கலியமூர்த்தி (வயது 94) அவர்கள் 7.10.2025 மாலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
மாவட்ட கழகத்தின் சார்பில் 8.10.2025 அன்று காலை அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவரது உடலில் திராவிடர்கழக, திராவிட முன்னேற்றக் கழக கொடிகள் போர்த்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் பி.கல்யாணம், கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கு.இளமாறன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் தி.சபாபதி, விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன் மற்றும் திராவிடர்கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.