ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர், மே 22 ராஜஸ்தான் மாநில முதல்-அமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது அரசு மீது பா.ஜனதா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டால் நாங்கள் பயப்படப் போவது இல்லை. அவர்கள் சொல்வது பொய். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில்தான் அதிகமான ஊழல் நடக்கிறது. அங்கு ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் பசியுடன் திரியும் ஓநாய் கூட்டமாக உள்ளனர். ஆட்சி அமைத்தவுடன், சாப்பிடத் தொடங்கி விடுகிறார்கள். அந்தந்த மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிக் கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. நீங்கள் எந்த தொழில் அதிபருடனும் பேசி இதை சரிபார்த்துக்கொள்ளலாம். கருநாடக தேர்தல் முடிவில் இருந்து பா.ஜனதா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் 29 இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி மத மோதலை உருவாக்க சதியா?
கோவையில் பிரியாணி குறித்து அவதூறு: 9 பேர் மீது வழக்கு
கோவை,மே22- கோவையில் பிரியாணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதவாத நஞ்சை பொது மக்களிடையே பரப்பி, மத மோதலை உருவாக்குகின்ற நோக் கத்துடன் கோவையில் அனைவரும் விரும்பி உண்ணுகின்ற பிரியாணி விற்பனைசெய்யும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கடைக்காரர்மீது அவதூறு பரப்பும்வகையில், பிரி யாணியில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு அளிக்கப்படும் பிரியாணியில் மட்டும் கருத்தடை மாத்திரை கலந்து விற்பனை செய்வதாக புரளி பரப்பியுள்ளனர். அதன்படி, கோவையில் இந்துக்களுக்கு பிரியாணி விற்றதாகவும், அதை காவல்துறை கண்டறிந்ததாகவும் டிவிட்டரில் அவதூறான பதிவு பதி வேற்றப்பட்டுள்ளது. அவதூறு பதிவுகளை வெளியிட்ட 9 டிவிட்டர் கணக்காளர்களின் மீது தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் புகார் தெரிவித்தார். டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட
9 பேர் மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.