சென்னை, அக்.8 ஒன்பது அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், தொடர் போராட் டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், அ.பூபதி, சி.குமார், அண்ணா குபேரன், எஸ்.ரவி ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.6-ஆம் தேதி முதல் 42 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்தமாக 15 நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு எடுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தயாரான நிலையில், பெரா கூட்டமைப்பை அக்.4-ஆம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 9 அம்ச கோரிக்கை களும், அரசு தரப்பில் ஏற்கப் பட்டு எழுத்துப்பூர்வமாக தெரி விக்கப்பட்டது. இதனால், அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.