சென்னை, அக்.8: ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: பயணச்சீட்டு சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் – தட்டச்சர் & போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,800 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு: 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.10.2025 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2025