தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காவல்துறைக்காக வெடி குண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட மேனாள் இராணுவ வீரர்கள் / மேனாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. இது தொடர்பான முழு விபரமும் பின்வருமாறு;

தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின்வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப் பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய மேனாள் இராணுவ வீரர்கள் / ேமனாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:-

(i) ஆய்வாளர் (BDDS) – மேனாள் சுபேதார் / சுபேதார் மேஜர் – 2 காலியிடங்கள்

ஊதிய அளவு – 37,700-1,19,500

(ii) உதவி ஆய்வாளர் (BDDS) – மேனாள் நாயிப் சுபேதார் – 14 காலியிடங்கள்

ஊதிய அளவு – 36,900-1,16,600

(iii) தலைமைக் காவலர் (BDDS) – மேனாள் ஹவில்தார்/ நாயக் – 43 காலியிடங்கள்

ஊதிய அளவு – 20,600-65,500

விண்ணப்பதாரர்கள் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும்:- வயது – 01.07.2025 நாளன்று 50 வயதுக்குக் கீழுள்ளவர்கள், கல்வித் தகுதி – குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, தொழில்நுட்ப தகுதி – CME, புனே அல்லது NSG அல்லது BCAS ஆல் நடத்தப்படும், குறைந்தபட்சம், 6 வார BDD படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும், அனுபவம் – இராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மய்யம்-NBDC அல்லது விமான நிலையங்களின் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி – SHAPE-I.

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சுயவிவரங்கள் (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், மருதம், எண்.17, போட் கிளப் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு 31.10.2025 க்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் மூலம் தேர்வு சோதனைகளுக்கு (சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் போன்றவை) அழைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்பு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *