ஜாதி அமைப்பைப் போற்றுவதும் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பேசுவதும் வெறுக்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டனம்

தமிழ்நாடு

சென்னை, அக்.8–- பார்ப்பனர்கள்­தான் நமது சமூ­கத்­தில் அறிவு தீபத்தை ஏற்­று­ப­வர்­கள். பார்ப்பனர்­கள் சாஸ்­தி­ரங்­களை மட்­டு­மல்ல, அஸ்­தி­ரங்­க­ளை­யும் வணங்­கி­னர். ஆயு­தங்­க­ளும் சாஸ்­தி­ரங்­க­ளும் மட்­டுமே நாட்­டைப் பாது­காக்க முடி­யும். மதத்­தைப் பரப்பி, நல்ல பண்­பு­களை வளர்ப்­ப­தன் மூலம், பார்ப்பன சமூ­கம் எப்­போ­தும் சமூ­கத்­தின் நன்­மைக்­கா­கவே பாடு­பட்­டுள்­ளது. எனவே எந்த அர­சாங்­கம் ஆட்­சி­யில் இருந்­தா­லும் பிரா­மண சமூ­கத்­தின் நல­னுக்­காக பாடு­பட வேண்­டும்” என்று டில்லி முதல்­வர் ரேகா குப்தா தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில், திமுக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி, தனது சமூக வலை­த­ளப் பக்­கத்­தில் வெளியிட்ட பதிவு வருமாறு:– ஜாதி அமைப்­பைப் போற்­று­வ­தும், ஒரு குறிப்­பிட்ட ஜாதி­யின் பெரு­மையை உயர்த்தி பேசு­வ­தும் இந்த நாட்­டின் சாபக்­கே­டான விஷ­ய­மா­கும். ஜாதி­யின் பெய­ரால் பலர் கொல்­லப்­பட்ட பிற­கும், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­கள் பிர­தி­நி­தி­யான டெல்லி முத­ல­மைச்­சர் ரேகா குப்தா அந்த ஜாதி அமைப்பை புகழ்ந்து பேசு­வது வெறுக்­கத்­தக்­கது, வெட்­கக்­கே­டா­னது மற்­றும் தேசவிரோ­த மா­னது.

இதே பிளவை தான் பாஜக திட்­ட­மிட்டு ஆழப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த அடக்­கு ­மு­றையை ஒழிக்க பெரி­யார் வாழ்­நாள் முழுக்­கப் போரா­டி­னார்; சமீ­பத்­தில், தமிழ்­நாடு ஆளு­நர் “தமிழ்­நாடு ஏன் போரா­டு­கி­றது?” என்று கேட்­டார்.

அவ­ருக்­குப் புரிந்­து­ கொள்ள வேண்­டி­யது, இந்­தப் போராட்­டத்தை நாங்­கள் ஒரு­போ­தும் நிறுத்­த­மாட்­டோம் என்­பதை அவர் புரிந்து கொள்ள வேண்­டும்.

இவ்வாறு நாடாளு மன்ற உறுப்பினர் கனி­மொழி கரு­ணா­நிதி பதி­விட்­டுள்­ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *