இஸ்ரேல் அரசு – ஹமாஸ் குழுவினர் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்

கெய்ரோ, அக்.8:  இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

போர் நீடிப்பு

இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு அமைக்​கப்​படும். இந்த குழு​வில் ஹமாஸ் தலை​வர்​களுக்கு இடம் கிடை​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர் உள்​ளிட்​டோர் அடங்​கிய சர்​வ​தேச குழு​வின் வழி​காட்​டு​தலின்​படி புதிய குழு காசாவை நிர்​வகிக்​கும். காசா​வில் சிறப்பு பொருளா​தார மண்​டலம் உரு​வாக்​கப்​படும்.சர்​வ​தேச முதலீடு அதி​கரிக்​கப்​படும். வேலை​வாய்ப்​பு​கள் பெருக்​கப்​படும். ஐஎஸ்​எப் என்ற சர்​வ​தேச படை காசா​வில் பாது​காப்பு பணியை மேற்​கொள்​ளும் என்பன உள்​ளிட்ட திட்​டத்தை அதிபர் ட்ரம்ப் அறி​வித்​திருக்​கிறார்.

பேச்சு வார்த்தை

இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே நேற்று முன்​தினம் அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்
​கியது.  இஸ்​ரேல் அரசின் மூத்த அமைச்​சர் ரோன் டெர்​மர் தலை​மையி​லான குழு, ஹமாஸ் மூத்த தலை​வர் காலில் அல் ஹையா தலை​மையி​லான குழு பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இரு தரப்புக்கும் இடையே 2-வது நாளாக நேற்​றும் பேச்​சு​வார்த்தை நீடித்​தது. அமெரிக்​கா​வின் சிறப்பு தூதர் விட்​காப் மற்​றும் அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இன்​றைய பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க உள்​ளனர். அப்​போது முக்​கிய உடன்​பாடு எட்​டப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையி​லான பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக்​கை​தி​களை விடு​தலை செய்​து, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைத்​து​விட்​டால் உடனடி​யாக போர் நிறுத்​த ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​”  என்று தெரி​வித்​தன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *