பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த நாள் இன்று (8.10.1959)
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த நாள் இன்று (8.10.1959).
29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர், தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, பொதுவுடைமை சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்.
“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது” என்ற இரண்டே வரிகளில் உழைக்கும் மக்களின் பசியை, வறுமையை உலகுக்கு உணர்த்தியவர்.
‘தாலி கட்டிக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிக்கணும்’ என்று தந்தை பெரியார் பெண்ணுரிமைக் கருத்துகளை திரைப்படப் பாடலைத் தந்தவர்.
பட்டுக்கோட்டையார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மீது அதீத பற்றுடையவர். கவுரவம்மாள் – பட்டுக் கோட்டையாரின் திருமணம் பாரதிதாசன் தலைமையில் தான் நடந்தது. பட்டுக்கோட்டையார் தன் கவிதைகள் எழுதுவதற்கு முன்பு ‘பாரதிதாசன் வாழ்க’ என்று எழுதி விட்டு தான் தொடங்குவார்!
ஆறு ஆண்டு காலத்திற்குள் 250–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.
இவரது பாடல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் இவரது நினைவாக மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.