காரைக்குடி, மே 22- காரைக்குடி நகர திராவிடர் கழகம் சார்பில் காரைக்குடி 5 விளக்கு திடலில்18.05.2023 மாலை நடை பெற்றது.
கூட்டத்திற்கு, நகரத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் ந. ஜெகதீசன் தலைமை வகித்தார் , மாவட்டத் தலை வர் ச. அரங்கசாமி, மாவட்ட செயலா ளர் ம. கு.வைகறை, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப. பழனிவேல், மாவட்ட அமைப்பாளர் சி. செல்வமணி ஆகியோர் முன்னிலையில் நகர செயலா ளர் தி. கலைமணி வரவேற்புரையாற்றி னார்.
சிறப்புரையாற்றிய கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் தனது கருத்துக் கனல் உரை யில் வைக்கம் போராட்டம் இந்திய ஒன்றியத்தின் மனித உரிமைப் போரில் முன்னோடி யாகும், தமிழ்நாட்டின் சமூக நீதி போராட்டத்திற்கு இது அடித்தளமான போராட்டம் என்றும், புரட்சியாளர் அம்பேத்கரின் போராட் டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த வரலாற்று செய்தி யினையும் பதிவு செய்தார். இன்றைய திராவிட மாடல் ஆட்சி, ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, ஓர் இனத்தின் ஆட்சி என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டதை பகிர்ந்து கொண்டார்,
நிகழ்வில் ஏஅய்டியூசி மாநிலக் குழு உறுப்பினர் பழ.ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சிவாஜி காந்தி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு அசோகன், திமுக மாணவர் கழக அமைப்பாளர் கதி. ராஜ்குமார், கழக காப்பாளர் சாமி.திராவிட மணி, கல்லல் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா, கோட்டை, தேவ கோட்டை நகர தலைவர் வீ.முருகப்பன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், தேவகோட்டை ப.க தலைவர் சிவ.தில்லை ராஜா, மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், சண்முகம் திமுக, கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ. பாலு நன்றியுரை கூறினார்.