சென்னை, அக்.7 மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ ரகமதுல்லா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது:
ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கண்டறியப்பட்ட தகுதி உள்ள பணியிடங்கள் அரசாணை எண் 20 வெளியிடப்பட்டு நடைமுறையில் இருந்த வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாக தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் 119 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகள் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த பணியிடமாக மாற்றி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தி.மு.கழக அரசு எப்போதெல் லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழு தெல்லாம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மாற்றுத்திறனாளிகள் என்ற தனித்துறையை உருவாக்கி தன்னுடைய நேரடி பார்வையில் வைத்திருந்தார். அதுபோல இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், மாற்றுத் திறனாளிகள் துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிகப்படியான நிதிகளை ஒதுக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கல்வி தொகை இரு மடங்கு உயர்வு
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தொகை இரு மடங்கு உயர்வு, அரசுப் பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெறுவதற்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்வு, உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் சமூகப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கு தற்போது அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை நான்கு சதவீதம் உறுதி செய்யும் விதமாக அவர்களின் சமூக, பொரு ளாதார முன்னேற்றத்தை உயர்த்து வகையில் குறிப்பாக கனிம வளம், சட்டம், கூட்டுறவு, ஊராட்சி, நகராட்சி, போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, சுற்றுலா, வேளாண் தகவல் தொழில்நுட்பம் ,உள்துறை நிதி, நிர்வாகம், சுகாதாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் இப்ப பணியிடங் களில் விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவீத மதிப்பெண்ணை தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு தேர்வு மூலம் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.