ராமேசுவரம், அக்.7- சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவருடைய மனைவி பத்மப்ரியா. இவர்களது மகன் புவி ஆற்றல் (வயது 12). மாற்றுத் திறனாளியான இந்த சிறுவன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் வீரர் ஆன இவர் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக்நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைக்க வேண்டும் என விரும்பினார்.
அதன்படி ராமேசுவ ரத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி சிறுவன் புவிஆற்றல் மற்றும் பெற்றோர், நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்டோர் படகு மூலம் இலங்கை தலை மன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து புவி ஆற்றல் தனுஷ் கோடி நோக்கி நீந்த தொடங்கினார்.
4.10.2025 அன்று பகல் 12 மணி அளவில் தனுஷ்கோடி வந்தார். சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தை 9 மணிநேரம் 11 நிமிடத்தில் கடந்து
சிறுவன் சாதனை படைத்தார்.
இந்த சிறுவனை இந்திய கடலோர காவல் படையினர், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
மாற்றுத் திறனாளி மாணவரின் சாதனை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்தார்

Leave a Comment