சென்னை,அக்.7- ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்ட ங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து ஜாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார்.
வழக்குரைரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச் சலத்தின் 18ஆவது ஆண்டு நினைவு கருத்தரங்கம் பிவிபி அறக்கட்டளை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. ‘ஆணவக் கொலைகளும், ஜாதியை அழித்தொழித்தலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற வர்கள் பேசியதா வது:
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்:
இந்திய அரசியல மைப்புச் சட்டம் இயற் றப்படுவதற்கு முன்பும், பின்பும் நீதிமன்றங்கள் ஆதிக்க ஜாதியை சார்ந்த கருத்துகளை முன் வைத்து, ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு எதிரான நிலையையே பெரும்பாலும் எடுத்து வந்துள்ளன. தமிழ்நாட்டில் ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப் பட்டாலும் கூட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை இன்னும் முழுமையாக நடை முறைக்கு வரவில்லை. அர்ச்சகர்களுக்கான தகுதிகளைப் படித்து, முறையாக பயிற்சி பெற்ற பிறகும் அனைத்து ஜாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை. ஜாதிய ஒழிப்புக்கு எதிரான இந்த சட்டப் போராட்டத்தில் பிவிபி போன்ற அறக்கட்டளைகள் மக்கள் மன்றங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
இவ்வாறு மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் குறிப்பிட்டார்.
மூத்த வழக்குரைஞர்
ப.பா.மோகன்
ஜாதியக் கொலை களுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டிய கட் டாயத்தில் இருக்கிறோம். எனினும், அது மட்டுமே ஜாதியக் கொலைகள், ஜாதியை ஒழித்துவிடாது. இவ்வாறு உயர்நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் கூறினார்.
ஜாதி ஒழிப்பு முன் னணி ஒருங்கிணைப்பாளர் ரமணி: ஜாதியக் கொலைகள் தொடர்பான பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து களஆய்வு நடத்தியுள்ளோம். ஆனாலும், ஜாதியக் கொலைகளை தடுக்க யாரும் எந்த நடவடிக் கையும் எடுக்காதது வேதனை.
சமூகத்தில் ஜாதியக் கொ லைகள், அத்துமீறல்களை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்கு சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில், ஒடுக்கப் பட்ட சமுதாயத்தில் இருந்து பலரை சட்டம் படிக்க வைத்து, வழக்குரை ஞர்களாக உருவாக்கும் முயற்சியில் பிவிபி அறக்கட்டளை தனது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு வழக்குரைஞர் பி.எஸ்.அஜிதா கூறினார்.