சென்னை, அக்.7 சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சார்பில் “ஆராய்ச்சி நாள்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தியது.
இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா இராஜகோபாலன் வழிகாட்டு தலில் இளநிலை மருந்தியல் நான்காம் ஆண்டு மாணவர் M. & Development of Bioadhesive vaginal films containing Thymus vulgaris essential oil and Manjistha leaf extract for synergistic treatment of vulvovaginal candidiasis’ என்ற தலைப்பிலான வாய்மொழி ஆராய்ச்சி க்கட்டு ரையினை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளும் பங்குபெற்ற இப் போட்டியில் இரண்டாம் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழினையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் 26.09.2025 அன்று நடத்திய பரிசு வழங்கும் விழாவில் தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், வெற்றி பெற்ற மாணவர் எம்.கார்த்திகேயனுக்கு பரிசினை யும் பாராட்டுச் சான்றிதழினையும் வழங்கி சிறப்பித்தார்.
பரிசு வென்ற மாணவருக்கு கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் பணியா ளர்கள் பாராட்டி வாழ்த் துக்களை தெரிவித்துக் கொண்டனர்.