என்ன செய்கிறது ஒன்றிய பிஜேபி அரசு? இந்தியா முழுவதும் 23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலி

1 Min Read

சென்னை, அக்.7- சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.

நீதிபதி பணியிடங்கள்

டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், கருநாடகா,கேரளா, குஜராத், கவுகாத்தி, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட நாடு முழுவதும் 25 நீதிமன்றங்கள்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 1,122 ஆகும்.

இதில் 792 நீதிபதிகள் மட்டுமே இப்போது பணியாற்றுகிறார்கள். 161 நிரந்தர நீதிபதிகள், 169 கூடுதல் நீதிபதிகள் என 330 நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அலகாபாத் நீதிமன்றத்தில் 160 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

காலிப் பணியிடங்கள்

மும்பை உயர் நீதிமன்றத்தில் 94 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 26 நீதிபதி பணியிடங்களும், பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 85 நீதிபதி பணியிடங்களில் 25 நீதிபதி பணியிடங்களும், கொல்கத்தா நீதிமன்றத்தில் உள்ள 72 நீதிபதி பணியிடங்களில் 24 நீதிபதி பணியிடங்களும், சென்னை நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 பணியிடங்களில் 19 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தலா 3 நீதிபதிகளை கொண்ட சிக்கிம் மற்றும் மேகாலயா நீதிமன்றங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள பணி யிடங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வழக்குகள் தீர்வை எட்ட முடியாமல் இழுத்துக்கொண்டே செல்லும் நிலை இருக்கிறது.

காரணம் என்ன?

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் 67 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகளை கொலீஜியம் என்ற அமைப்பு தேர்வு செய்து வருகிறது.

நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து கொலீஜியம் அமைப்பு பெறுவதில் ஏற்படும் நடைமுறை தாமதம்தான் சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *