டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு:; நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* ஸனாதன தர்மத்தை அவமதிக்க விட மாட்டேன் என முழக்கமிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச முயன்ற காவி வழக்குரைஞர் ராகேஷ் குமார் கைது.
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி: தலைவர்கள் கடும் கண்டனம்:
* சங் பரிவார் கும்பல்கள் நாட்டில் பரப்பி உள்ள வெறுப்பின் அடையாளம் தான் இது, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
* நமது ஜனநாயகத்தில் நீதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தலைமை நீதிபதி மீது தாக்கு: தேசத்திற்கான ‘எச்சரிக்கை மணி’; நாடு முழுவதும் பரவி வரும் “விஷத்தின்” விளைவாகும், சரத் பவார்.
* “யார் ட்ரோல் செய்யப்படவில்லை? நீதிபதிகள் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்காக அவர்கள் கூட தப்பவில்லை; அவர்களின் கடந்த காலம் இழுக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களும் கொண்டு வரப்படுகிறார்கள்,” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் கருத்து.
தி இந்து:
* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை தாக்கும் முயற்சி, கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்பு, வெறி, மதவெறி எவ்வாறு நமது சமூகத்தை ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை காட்டுகிறது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நமது நீதித்துறையின் பாதுகாப்பு மிக முக்கியமானது’’
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இரட்டை என்ஜின் சர்க்கார் லட்சணம்: வருமானம் முதல் தொழில் வரை ஒவ்வொரு வளர்ச்சி குறியீட்டிலும் பீகார் பின்தங்கியுள்ளது என அரசின் தரவுகள் காட்டுகின்றன.
– குடந்தை கருணா