நாகர்கோவில்,மே23- நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.
திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.
ஆரிய மாயையும் – திராவிட மருந்தும் என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் , மாவட்ட துணைத் தலை வர் ச.நல்லபெருமாள், ச. மணிமேகலை கருத்துரை ஆற்றினர்.
சி.காப்பித்துரை சிறப் புரை ஆற்றினார்.
மாநகர துணைத் தலைவர் ஹ.செய்க்முக மது கடவுள் மறுப்புக் கூறினார்.
மாவட்ட பகுத்தறிவா ளர் கழக செயலர் பெரியார் தாஸ் வர வேற்புரையாற்ற திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. கோகுல் நன்றி கூறினார். தோழர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.