புதுக்கோட்டை, அக. 6 – புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, கரூரில் சுமார் 1800 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலை கண்டெடுக் கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் காளிதாஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது இந்தக் கலைப் பொக்கிஷம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆய்வாளர்கள் குழுவி னர் இந்தச் சிலையின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாக இருப்பதை உறுதி செய்தனர். , இந்தச் சிலை தமிழர்கள் வாழும் பகுதியான வட இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி களான: அனுராதபுரம் முல்லைத்தீவு போன்ற இடங்களில் உள்ள புத்தர் சிலைகளுடன் அதிக ஒற்றுமை கொண்டிருப்ப தாகத் தெரிவித்து ள்ளனர்.
இதன்மூலம், இப்பகுதிக்கும் இலங்கைக்கும் இடை யேயான பழைமையான பண்பாட்டுத் தொடர்புகள் உறுதிப்படுத் தப்படுவதாகக் கருதப்படு கிறது.
ஈழப்பகுதி களில் கிடைத்த புத்தர் சிலைகளுடன் ஒற்றுமை: ஆய்வாளர்கள் வியப்பு!