வாசிங்டன், அக். 6- அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அங்கு சட்டவிரோதமாக தங்கி யிருக்கும் வெளிநாட்டவர்களை தொடர்ந்து கைது செய்து நாடு கடத்தி வருகிறார். ஒரிகோன் மாகாணம் போர்ட்லாண்ட், இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பலர் குடியிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற தேசிய ராணுவப்படை, சட்டவிரோத குடியேற்றத்துறை ஆகியவை முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதன்படி ஒரிகோன் மாகாணம், போர்ட்லாண்ட் மாகாணத்தில் 300 ராணுவ வீரர்களை குவிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த மாகாண நீதிபதி கேரின் இமர்கட் மாகாணத்தில் ராணுவ வீரர்களை குவிக்கும் இந்த நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடைவிதித்துள்ளார். வருகிற 18ஆம் தேதி வரை இதனை எதிர்த்து ஆளும் அரசாங்கம் வழக்கு தொடரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்