ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களால் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

2 Min Read

கீவ், அக். 6- ரஷ்யா வேண்டுமென்றே கதிர்வீச்சு அச்சுறுத்தலை உருவாக்குகிறது என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக் ரைன் இடையே 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக் ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. சுமார் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன்-ரஷ்யா இடையே போர்நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷ்யாவுக்கு வடகொரியா அரசு ராணுவத் தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பில் உள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரைனின் பல பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து டிரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக செர்னோபில் மற்றும் சபோரியா அணுமின் நிலையங்களுக்கு அருகே ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த 2 அணுமின் நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஆனாலும், அந்த நிலையங்களில் உள்ள எரிபொருள் கட்ட மைப்புகள் தொடர்ந்து குளிர்விக்கப்பட வேண்டும். இதற்காக அந்த அணுமின் நிலை யங்களுக்கு தொடர்ந்து மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரஷ்யா வின் டிரோன் தாக்குதல் காரணமாக 2 அணுமின் நிலையங்களுக்கும் மின்சார இணைப்பு தற்காலிகமாக துண்டிக் கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரி வித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள அணுமின் நிலையங்க ளுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ரஷ்யா வேண்டுமென்றே கதிர்வீச்சு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. உக்ரை னின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது, குறிப்பாக அணுமின் நிலை யங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஒரு பன்னாட்டு அச்சுறுத்தலாகும். இதற்கு கடுமையான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *